Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 FEB 1953
இறப்பு 19 APR 2023
அமரர் பொன்னுத்துரை கருணாநிதி 1953 - 2023 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வடக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை கருணாநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07-04-2024

அன்பொழுக அழைத்து
ஆசையாய் அரவணைத்து,
அறிவுதனைப்புகட்டி,
ஆனந்தமாய் நாம்வாழ
உங்களையே அர்ப்பணித்து,
இன்பமாய் நாம் இணைந்து,
மகிழ்ந்திருக்கும் வேளையிலே
பாசப் பிணைப்பறுத்து
பறித்துத்தான் எடுத்துவிட்டான்

துன்பம் என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தோமே
எங்கள் சுமைதாங்கி மறைந்ததனால்
துயரத்தில் மூழ்கினோமே
குடும்பம் என்றகோவிலின் குலவிளக்கு
அணைந்ததனால் எங்கள் இல்லத்தில்
ஒளி இழந்து போனோமே!

இல்வாழ்க்கை என்னும் பயணத்திற்கு வரமாக
வாய்த்தீங்கள் நிழல்போலே உங்களை பின்தொடர்ந்த
நாட்களெல்லாம் இப்போ நினைவாக மீட்கையிலே
வருந்துதே என் மனசு நிறையுதே என் விழிகள்!

சிந்தனையிலும், செயலிலும் எங்கள் உயர்வான
வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்த
எங்கள் அன்புத் தெய்வத்தின் இறுதிமூச்சு
அடங்கும்வரை அருகில் இருக்கும் வரம் தந்த
இறை அருளின் கருணைக்கு நன்றிகூறி,

உங்கள் ஆத்மா சாந்தியடைய நித்தமும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos