1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை பாலாஜி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்