Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 25 APR 1958
இறப்பு 11 FEB 2021
அமரர் பொன்னுத்துரை அருந்தவநாதன் (தவம்)
ஓய்வுபெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர்
வயது 62
அமரர் பொன்னுத்துரை அருந்தவநாதன் 1958 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அருந்தவநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

உங்களை பிரிந்து நாட்கள்
முப்பத்தொன்று கழிந்து போயிற்று
நாட்கள் மாதங்களாய் கழிந்து ஓடினாலும்
முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்
நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்
எம் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்

ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 11-03-2021 வியாழக்கிழமை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 13-03-2021 சனிக்கிழமை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்