யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்புத் தெய்வமே!
ஓடிச்சென்றது நாள் முப்பத்தொன்று!
தேடமுடியாத மனிதம் தொலைந்தது!
பாசமிகு அப்பா இங்கில்லையே!
பண்பினிலே சிறந்த மாமா இனியில்லையே!
எங்கள் இதயத்தில் ஓர் வெற்றிடம்!
அதை நிரப்பிட இனி யாருமில்லையே!
உறைந்து போனோம் உங்கள் பிரிவால்!
நித்தமும் போனோம் உங்கள் பிரிவால்!
நித்தமும் உங்கள் நினைவுகள் எமை வழிநடத்தும்....
எங்கள் அன்புத் தெய்வம் சிவபதமடைந்த செய்தி கேட்டு எமக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்தோருக்கும், இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியோருக்கும், தொலைபேசி மற்றும் எல்லா ஊடகங்கள் மூலமும் துயர் பகிர்ந்த அன்புள்ளங்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியும், கண்ணீர் அஞ்சலியிட்ட அன்புள்ளங்களுக்கும், அன்றைய தினம் தொலைபேசி மூலம் தேவாரதோத்திரங்கள் இசைத்தவருக்கும், நினைவு மலரை அழகாக வடிவமைத்தவர்களுக்கும், பல சிரமங்களின் மத்தியில் பல்வேறு வகைகளில் துணைபுரிந்த அன்பர்களுக்கும் இருகரம் கூப்பி எமது மனமார்ந்த நன்றிகளை நவில்கின்றோம்.
எங்கள் குடும்பத் தலைவரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும்
11-07-2020 சனிக்கிழமை அன்று பிரம்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் .
COVID- 19 இனால் ஏற்பட்ட சமூக இடைவெளி இடர் பாடு காரணமாக தங்கள் யாவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்காமைக்கு சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகின்றோம். ஆண்டு நினைவு நிகழ்வின் போது யாவரும் கலந்து கொள்வோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
விளையாட்டுத்துறை ஆசானின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.