யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராஜதுரை அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேவதி, ரோகினி, றஞ்சனி, சுபாசினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், ராசையா மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா, சிவகுமார், அருணகுமார், சோபனா, முகமது அலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சகானா, கிருத்திகா, பிரணவி, தர்வின், அஜிஸ், டிலான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.