

கிளிநொச்சி முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்டிருந்த பொன்னுத்துரை முருகேசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே அப்பா
பாசம் என்னும் பெரும் கயிற்றால்
எம் அனைவரையும் கட்டி அரவணைத்து
முன்னேற்றிய எமது தந்தையே!
எங்கள் துன்பங்கள் அனைத்தையும்
உங்கள் இதயத்துள் தாங்கி,
உறக்கத்திலும் விழிப்பிலும்
எம்மைக்
கண்ணிமைபோலக் காத்தவரே!
கொற்றாண்டார்புரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தை
அன்போடு கட்டியதும் நீங்களே,
அதே கோயிலின் தர்மர்கத்தாவாக
ஒளிவிட்டுச் சுடர்ந்ததும் நீங்களே
இன்று நீங்கள் உடலால் எங்களிடம்
இல்லையென்றாலும்,
உங்கள் நினைவுகள் எம்முள்
என்றும் உயிரோடு வாழ்கின்றன
நீங்கள் காட்டிய பாதையிலே
நாங்கள் நடந்து,
உங்கள் கனவுகளை
நிச்சயம் நிறைவேற்றுவோம், அப்பா.
ஒளிமிகுந்த வாழ்க்கைப் பாதையில்
எம்மை இட்டுச் சென்ற
எமது அன்புத் தந்தையே,
உங்கள் சாயல் எம்மை என்றும் வழிநடத்தட்டும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. Rest finally in peace Appa.