யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ் அவர்களின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியை 17-09-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறவுள்ளன. அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
Venue:
Akshaya Patra Hall, Shri Shiva Vishnu Temple
(End of Main Entrance Roadway on the right hand side before Valli Pillaiyar)
52 Boundary Rd, Carrum Downs VIC 3201
Pl accept deepest sympathies. May his soul rest in Peace