2ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/215186/4cc593b7-792d-4759-af89-2e03107f5b89/23-64f0ca54c3540.webp)
அமரர் பொன்னையா தர்மலிங்கம்
SVK & Sons கணக்காளர் (அகில இலங்கை ஒப்பந்தக்காரர் சங்கம்)
வயது 96
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணை மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை மேற்கை வசிப்பிடமாகவும், சென்னை லட்சுமி நகர் போரூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தர்மலிங்கம் அவர்களின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம் அப்பா
மீண்டும் வரமாட்டாரா என
ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்