1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/215186/4cc593b7-792d-4759-af89-2e03107f5b89/23-64f0ca54c3540.webp)
அமரர் பொன்னையா தர்மலிங்கம்
SVK & Sons கணக்காளர் (அகில இலங்கை ஒப்பந்தக்காரர் சங்கம்)
வயது 96
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை மேற்கை வசிப்பிடமாகவும், சென்னை லட்சுமி நகர் போரூரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தர்மலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-10-2023
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உங்களை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
ஓராண்டு ஓடிற்றோ?
உங்களை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீங்கள் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உங்கள் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டோம் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றோம்
தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்