Clicky

பிறப்பு 08 FEB 1935
இறப்பு 12 NOV 2023
அமரர் பொன்னையா சிவபாதசுந்தரம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 88
அமரர் பொன்னையா சிவபாதசுந்தரம் 1935 - 2023 ஏழாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Gunanayagam Sriganesh 18 NOV 2023 Canada

போய் வாருங்கள் பெரிய மாமா! உங்களைப் பார்த்து வளர்ந்தவனாக உங்களின் பெறுமதியை என்னால் உணர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இரண்டு பருவம் மட்டுமே உள்ள நாட்டில் பிறந்து நான்கு பருவ நாட்டிலே இறுதி அடைகிறீர்கள். வாழ்வின் சூக்குமம் புரிந்தவர்க்கு துன்பம் என்று எதுவுமே இல்லை. உங்கள் அன்பு மனைவி, அருமைப் பிள்ளைகள், ஆசை மருமக்கள், பேரப் பிள்ளைகள், பெறாப் பிள்ளைகள், நேசித்த மேசைப் பந்து சுவாசித்த வாசிப்பு, சமநிலை மனப்போக்கு, சற்றும் குறையாத மிடுக்கு மற்றும் கம்பீரம் ... சற்று எண்ணிப் பார்க்கையிலே விளிகளிலே சிறு ஈரம்... உற்சாக விளையாட்டும் உறுதி மற்றும் தெளிவுடனே இலக்கு நோக்கிப் பயணமுமாய் உங்கள் வாழ்க்கை. எழுபதிலும் கூட இளைஞனாய் மேசைப் பந்தாடிய நீங்கள் பலருக்கும் முன் நின்றீர்கள். பயிற்சி பெற்ற பலரும் விளித்தென்னை வினவிய வேளைகைளில் உங்கள் சிறப்பு எண்ணிச் சிலிர்த்திருக்கிறேன். எழுவரில் மூத்தவராய் என்றென்றும் மதிப்புக்கே உரியவராய்... வாழ்ந்து சென்றீர்கள் பெரிய மாமா! தங்கள் இறுதி நாளுக்கிடையில் தங்களைக் கண்டு தளர்வான விரல்களின் தடவலின் உணர்வு உட்கொண்டு சிலிர்க்கக் கிடைத்தமை எனக்கும் பெரும் பேறே! நிலையாமை என்பதுவே உண்மை இருந்தாலும் கலையாத நல்ல நினைவுகளைப் பேறாக்கி வழியனுப்பி வைக்கின்றோம் விழி நீரும் சேர்த்திங்கே. ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!