யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பஞ்சலிங்கம் அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(மாத்தையா) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சுகிர்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜனி அவர்களின் அன்பு மாமனாரும்,
நிவேதன், தாணியா, சஞ்சுதா, ஹாரினி ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசாம்பாள், செல்வத்துரை, கனகலிங்கம், தேவதாசன், பவானலட்சுமி, சிவலிங்கம் மற்றும் குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, வீரலட்சுமி, மனோன்மணி, வனசாட்சி, தேவராசா, நடேசர், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல 45,
விபுலானந்தர் வீதி,
அரியாலை.
அண்ணனுடன் ஜெர்மனியில் கழித்த நாட்களை மறக்க முடியாது. சுறுசுறுப்புடன் நகைச்சுவையுடன் பேசுவார். பேர்போன விளையாட்டு வீரர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். குடும்பத்தினருக்கு எனது...