
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தசாமி அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் ஆருயிருக் கணவரும்,
தயாளன்(டென்மார்க்), சுபாறினி(கனடா), சுதர்சினி(ஏழாலை), சிவகுணாளன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரமலர்(ஜேர்மனி), சிவராசா(ஏழாலை), இன்பமலர்(ஏழாலை), மல்லிகாமலர்(ஏழாலை), முத்துலிங்கம்(ஏழாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலாகினி(டென்மார்க்), சித்திராஞ்சன்(கனடா), கேதீஸ்வரன்(ஜேர்மனி), சக்தி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
இராசகுமாரி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ்(டென்மார்க்), ஸ்னேகா(டென்மார்க்), கதிர்ஜினி(கனடா), ஷங்கவி(கனடா), நிகேஷ்(கனடா), மிலக்ஷன்(ஜேர்மனி), திலக்ஷி(ஏழாலை), நிதர்ஷ்(ஏழாலை), சானுஜன்(லண்டன்) அதிர்ஷ்ரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரின் ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.