யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
காசி மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி கேட்டு துயருற்றோம்.உங்கள் தந்தையாரின் இழப்பு எங்கள் கோயிலில் நிரவ முடியாதது.அவர்து புனித ஆத்மா இறைவன் திருவடியில் பேரின்ப பெருவாழ்வு பெற இறைவனைப்...