

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 23/10/2025
ஐயா ஆண்டு ஒன்று ஆனபோதும்
ஆறவில்லை எம் துயரம்
இமைப்பொழுதும் மறந்திடுமா
இதயத்தில் உங்கள் நினைவு
தலையாரி, தனை இழந்து தவிக்கிறது எம் குடும்பம்.
ஆனாலும் உங்கள் ஆத்மாவின் ஆசியால்
மெல்ல மெல்ல மனதைத்தேற்றி
வழமைக்குத் திரும்புகின்றோம்
ஐயா சோடிக்கிளிகளாக எனறும் பிரியாது
கூடித்திரிந்த உங்கள் மனையாளோ
தன்னையே சிறைப்படுத்தி கூண்டுக்கிளி ஆகி விட்டார்.
ஆம்!
அவரும் உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டானாலும்
விண்ணுலகில் இருந்து உங்கள் சந்ததியை நல்வழிப்படுத்தி
ஆசீர்வதிக்கவேண்டுமென்று உங்களை சிரம் தாழ்த்தி
வணங்கி நிற்கின்றோம் ஐயா!
உங்கள் விழுதுகள்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolence Ponkumar Magentheraja and family, UK.
காசி மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி கேட்டு துயருற்றோம்.உங்கள் தந்தையாரின் இழப்பு எங்கள் கோயிலில் நிரவ முடியாதது.அவர்து புனித ஆத்மா இறைவன் திருவடியில் பேரின்ப பெருவாழ்வு பெற இறைவனைப்...