யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் காளிகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னப்பா யோகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அன்னாரின் மறைவுச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலை பேசி ஊடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் அணிவித்து ஆறுதல் கூறிய அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 25-01-2021 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.