மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சித்திரமேழி இளவாலை, கொழும்பு, தெஹிவளை 72A/1A மல்வத்த வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேலுநாதன் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 07-12-2024 சனிக்கிழமை அன்று மு.ப 04:30 மணியளவில் முகத்துவாரம் அந்தியேட்டி மண்டபத்திலும் வீட்டுக்கிருதியை நிகழ்வு 07-12-2024 சனிக்கிழமை மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற்று, அதனை தொடர்ந்து 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பம்பலபிட்டி தொடர்மாடி சமூக மையம்(Bambalapitiya Community Center Hall)இல் நடைபெறும் அன்னாரது ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் மற்றும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்
Accept our heartfelt condolences. let us pray for his soul to rest in peace. Rajeswaran family US A.