யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பிரதீபன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
இன்று எம்மை தவிக்கவிட்டு எங்கே நீசென்றாய்?
உடன் பிறப்பே உன் உறவே
உயர்ந்தென்று இருந்தோம்.
எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய்
கலந்திருந்தோம் பாதியிலே நீ
எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்
புன்னகையோடு காணாமல் போனவனே
கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம் அத்தனையும் நீ
கனவாக்கி எங்கு சென்றாய்!
காலங்கள் தேய்திடுனும்
உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றன ஊரே
உனை நினைத்து உருகுகின்றது மீண்டும் வாராயோ
உன் பிரிவால் துவண்டு கிடக்கும்
உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
our deepest condolences, Pradeepan