Clicky

2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் சண்முகலிங்கம், ஜனகன் விஜயமனோகர்
இறப்பு - 21 APR 2024
அமரர் பொன்னம்பலம் சண்முகலிங்கம், ஜனகன் விஜயமனோகர் 2024 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

தோற்றம் : 15-08-1932 - மறைவு : 21-04-2024

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய

துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!
  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...


தோற்றம் : 05 -09-1994 - மறைவு : 16-04-2011  

லண்டனை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜனகன் விஜயமனோகர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!

வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்

அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!

கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Photos