

தோற்றம் : 15-08-1932 - மறைவு : 21-04-2024
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள்
தானே உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த அப்பா!
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது உங்கள் நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தோற்றம் : 05 -09-1994 - மறைவு : 16-04-2011
லண்டனை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜனகன் விஜயமனோகர் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
உன் மலர்ந்த பூ முகமும்
மகிழ்ச்சி பொங்கி நிற்கும் உன்
முத்தான புன்சிரிப்பையும் பார்ப்பது எங்கே?
உன் வரவை பார்த்து பார்த்து
ஏங்குது எம்மனம்! பாச நதியில்
ஒர்வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீயே எமக்கு
தம்பியாக வேண்டும்
வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே எங்கள் காலம்...