திரு பொன்னம்பலம் குலசிங்கம்
இறப்பு
- 03 DEC 2025
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Dear
Kulenga maami, Venkadesh, Linkesh and Sakthy words may not suffice to express the heartfelt sorrow that I feel for this great loss but please accept my condolences and I will be remember in my daily prayers.
Om Shanthy! 🙏🏾🙏🏾🙏🏾
அஞ்சலி நினைவலைகள்
குலசிங்க மாமா ( நாங்கள் அன்பாக கூப்பிடும் வார்த்தை குலேங்க மாமா) என்று இனி யாரை நாங்கள் அப்படி கூப்பிடுவது? எங்கள் குடும்பங்கள் எல்லோருக்கும் ஓர் அன்பின் தூணாக நின்று சபைகளை சிறப்பிக்கும் ஓர் மாமா எங்களை விட்டு சென்று விட்டார் என்பதை நினைக்கும் பொழுது நம்பவே முடியவில்லை. எல்லோரையும் ஏமாற்றி விட்டு சென்று விட்டீங்கள். எங்கள் அம்மாவின் இறப்பு செய்தி கேட்டு உடனே அன்ரி வீட்டிற்கு வந்து உங்கள் சின்னக்காவை video call இல் பார்த்தீங்களே அது தான் நாங்கள் உங்களை கடைசியாக பார்த்த நிமிடங்கள். எல்லாம் ஓர் காரணத்தோடு தான் நடந்திருக்கிறது என்பதை எங்களுக்குத்தான் விளங்கவில்லை. சின்னக்கா தான் உங்களை தனக்கு துணையாக அழைத்திருக்கிறாவா? எனவும் சிலவேளை நினைக்க தோன்றுகிறது. நீங்கள் எங்களை விட்டு போனாலும் நீங்கள் வழிபடும் பெருமாள் வடிவில் எங்கள் குலேங்க மாமாவை நாங்கள் வழிபடுவோம் என்ற மன ஆறுதலில் உங்கள் பிரிவினை அமைதியோடு ஏற்று கொண்டு உங்கள் ஆத்மா நலமே இறையடி சேர வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! 🙏🏾🙏🏾🙏🏾
Write Tribute