Clicky

பிறப்பு 12 DEC 1950
இறப்பு 20 APR 2023
அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் 1950 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஜெகநாதன் அண்ணா
Late Ponnambalam Jeganathan
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka

என் பிரியத்திற்குரிய, என்மேல் உண்மை அன்பு கொண்ட  ஜெகநாதன் அண்ணா! இலங்கையில் 20 வருடங்களுக்கு மேலாக ஒன்றாகவே இருந்தோம். இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் எல்லாவற்றையும் சேர்ந்தே கடந்தோம். காலம் என்னை கனடாவிற்கு விரட்டியது.  அதன் பின்பு வந்த 30 வருடங்களில் நான் என் உறவினரிடம் கேட்க்கும் முதற்கேள்வி  ஜெகநாதன் அண்ணா எப்படி இருக்கிறார் என்பது தான். ஒருவர்கூட சொல்லவில்லையே நீங்கள் என்னை விட்டுப்  போகப் போகிறீர்கள் என்று. உங்கள் பிரிவு என்னை ஏதோ செய்கின்றது. அன்பு, அறம், பண்பு, பாசம், உண்மை, நேர்மை என்று வாழ்ந்த நீங்கள் ஏன் இவ்வுலகை வெறுத்தீர்கள். மறுவுலகம் உங்கள் ஆன்மாவை சாந்திப்படுத்தட்டும் . என்றும் என் பிரார்த்தனைகள் உங்களுக்கு உரித்தாகட்டும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute