திதி:22/07/2026
யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் ஞானகமலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
ஓராண்டு கடந்துவிட்டது,
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
இன்றும் எங்கள் இதயங்களில்
பசுமையாகவே வாழ்கின்றன
உன் அன்பான வார்த்தைகளும்,
அரவணைக்கும் கரங்களும்,
தியாகம் நிறைந்த வாழ்வும் என்றும்
எங்கள் வழிகாட்டியாக இருக்கும்
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!