3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம் K.K.S வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாம் ஆண்டு நினைவலை!
ஆண்டு மூன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால் எம்மடியில்
வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept My Heartfelt sympathies, Rest in Peace.