2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம் K.K.S வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா குணலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு சென்றாலும்
ஆறாதய்யா எமதுள்ளம் ஆறாத
துயரம் இன்னும் –நெஞ்சில் நீராக
நின்றெரியுதய்யா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அப்பா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு ஆறவில்லை நெஞ்சம்...
அன்பின் ஈரம் காய்வதற்கு
என்றும் எம் அருகில் இருக்கின்றாய் -
அதனால் ஏங்கவில்லை நாம் இனிக்
காண்போமா என்று கல்லறை வாழ்வில்
நெடுங்காலம் சென்றாலும் எங்கள்
நெஞ்சறைக் கூட்டில் அழியாத
ஓவியம் அப்பா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Please accept My Heartfelt sympathies, Rest in Peace.