Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 NOV 1948
இறப்பு 05 NOV 2024
திரு பொன்னையா தருமகுலசிங்கம்
வயது 75
திரு பொன்னையா தருமகுலசிங்கம் 1948 - 2024 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை பொன்னாவரசன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தருமகுலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நாட்கள் 31 ஆன போதும்
 உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர் 
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி அந்தியேட்டி கிரியைகள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியைகள் 05.12.2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு அன்று அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.