25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பீதாம்பரம் தனபாலசிங்கம்
(இந்திரன்)
வயது 41
அமரர் பீதாம்பரம் தனபாலசிங்கம்
1953 -
1995
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் தனபாலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று
ஆண்டுகள் 25 கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை எங்கள் அப்பாவின் அன்புமுகம்!
நீர் இறையடி எய்தியதை
இன்றும் நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
காலத்தால் எமை விட்டு நீர் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
அம்மா, சகோதரர்கள், பிள்ளைகள்(குகன், லதா, பிரகாஷ்)
தகவல்:
லதா ராஜன்(மகள்)
RIP Inthiran Aththan