Clicky

பிறப்பு 31 MAR 1997
இறப்பு 22 MAY 2026
திரு பிரவீன் மகேஸ்வரன்
வயது 29
திரு பிரவீன் மகேஸ்வரன் 1997 - 2026 London, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
என்ன அவசரமோ..
Mr Piraveen Maheswaran
London, United Kingdom

என்ன அவசரமோ..?? எங்கு பிறந்தாயோ., ஏன் திடீர் என்று போனாயோ..! அந்த மரத்தடியில், மரணம் உன்னை அணைத்ததேனோ..! அந்த மரத்திற்கு உன்னில் ஏன் இந்த ஈடுபாடு.? ஏன் உன்னை ஈர்த்தெடுத்தது..? உன்னை கண்டதில்லை.., காண வேண்டிய அவசியமும் இதுவரை வந்ததில்லை..! கண்களில் கண்ணீர் துளிர்க்க வைத்து விட்டு பறந்தாயே மகேஸ்வரன் மகனே..! என்ன அவசரமோ.?? என் பையன்களுடைய வயதுதான் உனக்கும்.., அவர்களுக்கும் உன்னை தெரிந்திருக்கிறது..! உன்னுடன் உதை பந்தாட்டம் விளையாடினதாக சொன்னார்கள்.. பல கதைகள்.,பல காரணங்கள்.. எந்த ஆராய்ச்சியிலும் என் மனம் போகவில்லை. உன் இழப்பை சுற்றியே.,மனம் இறக்கை அடித்து பறக்கிறது..! அழகான ஆண் மகனாய் இருக்கிறாய்.. அரை குறையாக.,வாழ்க்கையை முடித்து விட்டாயே.. என்ன அவசரமோ.?? மரணத்தை பல கோணங்களில் பார்த்திருக்கிறேன்..! எப்படி வலிக்கும் என்று எனக்கு தெரியும்..! உன் குடும்பத்தாருக்கு ஆறுதல் எது.?? ஆயிரம் வார்த்தைகள் போதாது..,பிரவீன்..! பிரிந்து போனது உன் உயிர் மட்டுமில்லையே.. உன் வீட்டாரின் உயிரும்தானே.,! மறதியை போல் ஒரு மாமருந்து இல்லை என்பார்கள்..! உருக்குலையும்.,உன் குடும்பத்தாருக்கு.,எந்த மாமருந்து மறதியை கொடுக்கும்..! என்ன அவசரமோ.,மகேஸ்வரன் மகனே..! அவசரம்.,அவசரமாய்..,தூங்கப் போய் விட்டாய் வீட்டில் எல்லோரையும் தூக்கில் போட்டுவிட்டு..! என்ன அவசரமோ..! கண்ணீர்த் துளியுடன்.. கனத்த மனத்துடன்..😢

Write Tribute

Tributes

Summary

Notices

அகாலமரணம் Sun, 31 May, 2026