Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 04 JAN 1941
விண்ணில் 28 MAY 2017
அமரர் பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம்
முன்னாள் பொது முகாமையாளர் ப.நோ.கூ சங்கம் நானாட்டான், விவாக பிறப்பு, இறப்பு பெரும்பகுதிப் பதிவாளர்
வயது 76
அமரர் பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம் 1941 - 2017 பெரிய குஞ்சுக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மன்னார் பெரிய குஞ்சுகுளத்தைப் பிறப்பிடமாகவும், ஜீவநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஏழு ஆண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
 மறையுமா நினைவின் பாசம்
 எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்

காலங்கள் ஆயிரம் போனாலும்
 மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை!
 ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள் அது
 எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால்
எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!

பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்

உங்கள் ஆத்ம சாந்திக்காக
எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices