Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 04 JAN 1941
விண்ணில் 28 MAY 2017
அமரர் பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம்
முன்னாள் பொது முகாமையாளர் ப.நோ.கூ சங்கம் நானாட்டான், விவாக பிறப்பு, இறப்பு பெரும்பகுதிப் பதிவாளர்
வயது 76
அமரர் பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம் 1941 - 2017 பெரிய குஞ்சுக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மன்னார் பெரிய குஞ்சுகுளத்தைப் பிறப்பிடமாகவும், ஜீவநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேசத்தின் இருப்பிடமே
பாசமிகு தந்தையே நீங்கள்
எம்மைப்பிரிந்து ஐந்து ஆண்டுகள்
ஆனதோ? நம்பமுடியவில்லையே!

உண்மை, நேர்மை என்ற இரண்டையும்
இரண்டு கண்களாகக் கொண்டு
இறுதிவரை வாழ்ந்தவரே

எம்மை பக்குவமாய் வளர்த்த பண்பாளனே!
நீங்கள் எமக்கு காட்டியவைகள்,
ஊட்டியவைகள் யாவும் நித்தம், நித்தம் நினைவில்
வந்து எம்மை நெறிப்படுத்திச் செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம் அப்பா

எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் எமது
மனங்களில் உங்கள் நினைவும், பெருமையும்
புகழும் கோபுரமாய் உயர்ந்தே நிற்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices