2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிலோமினா ராஜேந்திரம்
ஊர்காவற்துறை புனித மரியாள், பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரிகளின் இளைப்பாறிய ஆசிரியை
வயது 92
Tribute
61
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Catford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலோமினா ராஜேந்திரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகிய உங்கள் முகம் பார்த்து
ஈராண்டு ஆனால் என்ன
உங்கள் பாச நினைவுகள்
எங்களின் உயிர் மூச்சாய்
எம் நெஞ்சமதில் வாழ்ந்து
கொண்டே இருக்கும்
எங்கள் ஆருயிர்த் தாயே
எங்கள் இதயத்தில் வாழும் தெய்வமே...
காலங்கள் பல கடந்தாலும் கண்மணிகள்
நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறை
வரம் ஏதும் தாராயோ அம்மா...
கண்ணுக்குள் மணிபோல் இமை
போல் காத்தாயே அம்மா...
உங்களை காலன் எனும் பெயரில் வந்த
கயவன் களவாடி சென்றதேனோ...
நீங்கள் விண்ணில் கலந்த நாள் முதல்
எங்கள் விழிகள் உங்களையே தேடுகின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Aunty Philomina’s memories will be there in our hearts