என் அன்பு பாசமுள்ள மாமி, அதற்கு மேல் என் அம்மாவாக எங்களை எல்லாம் வழிநடத்திச் சென்று விட்டு இன்று எங்கு சென்று விட்டீர்கள் அம்மா. உங்களின் புன்னகைச் சிரிப்பை இனி நாங்கள் எப்போ கேட்கப்போறோம். எங்களை தவிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா. எங்களிடம் மீண்டும் வருவீர்கள் என்று வழி மேல் விழிவைத்துக் காத்திருக்கின்றோம். உங்களின் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஏமாத்தி விட்டு போய்விட்டீர்கள். நீங்கள் எங்களை விட்டுப் போனாலும் உங்களின் நினைவுகள் எங்களை விட்டு நீங்காது. உங்களுக்காக என் வீட்டுக் கதவுகள் என்றும் திறந்துவைக்கப்படும். என்றும் எங்களின் மனங்களில் இருந்து நீங்கமாட்டீர்கள். மறுபடியும் நீங்கள் வந்து பிறக்க வேண்டும். உங்களின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இப்படிக்கு உங்கள் பாசமிகு மூத்த மருமகள் அ. மேரி இராசமலர் ?