யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்ஸ் சூசைதாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எங்கள் குடும்பத்தலைவனே!
எங்கள் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
நீங்கள் இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே அப்பா!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பத்தாண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள் நாங்கள்
என்றும் பயணிப்போம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
Hi Soosai, I still remember about the cycle ride between Vaddakachi and Vavunia to School of Agriculture. You were very helpful during the rides and have good memories regardless the challenges we...