Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 MAY 1933
இறப்பு 08 JUL 2010
அமரர் பிலிப் சூசைப்பிள்ளை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- புனித ஜோசப் கல்லூரி- அனுராதபுரம், புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்- யாழ்ப்பாணம்
வயது 77
அமரர் பிலிப் சூசைப்பிள்ளை 1933 - 2010 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் சூசைப்பிள்ளை அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.   

பதினாறு ஆண்டுகள் கடந்தாலும்
பசுமையாய்
வாழ்கின்றது உங்கள் நினைவு…

நாற்பது ஆண்டுகள் ஆசிரியராக இருந்து,

நல்லறிவின் விளக்காய் பலரை வழிநடத்தினீர்.

கல்வியால் மாணவர்களின் வாழ்வை உயர்த்தி,

காலம் கடந்தும் மனங்களில் நிலைத்திருக்கிறீர்.
கால்பந்தாட்ட மைதானத்தில் திறமை காட்டி,

வெற்றியின் வீரராக அனைவராலும் போற்றப்பட்டீர்.

நாடக மேடையில் கலைஞனாய் மிளிர்ந்து,

ஒப்பனைக் கலையிலும் ஒப்பற்றவராய் விளங்கினீர்.
அன்பான கணவராய் குடும்பத்தின் தூணாக இருந்து,

அமைதியும் அன்பும் நிறைந்த இல்லம் அமைத்தீர்.


பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக மட்டுமன்றி,

வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டும் ஒளியாக இருந்தீர்.
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என்றும் துணையாகி,

உதவும் உள்ளத்தால் அனைவரின் இதயத்தையும் வென்றீர்.

உங்கள் அன்பும், தியாகமும், வழிகாட்டுதலும்

என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.

உங்கள் ஆன்மா இறைவனின் சாந்தியிலும்
சமாதானத்திலும்
இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices