15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிலிப் சூசைப்பிள்ளை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- புனித ஜோசப் கல்லூரி- அனுராதபுரம், புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்- யாழ்ப்பாணம்
வயது 77
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் சூசைப்பிள்ளை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அவனியிலே வித்தகராய் வாழ்ந்திடவே வழியமைத்தீர்
அறிவுரைகள் தந்துஎமை புடமிட்டே வளர்த்திட்டீர்
அன்பினாலே எமைஅணைத்து அழகுடனே வாழவைத்தீர்
ஆசிரியப் பணியினையும் கருத்துடனே கவனித்தீர்
ஊரவரை உறவினரை உற்றமாய் நினைத்திட்டீர்
உதிரத்தை உரமாக்கி எம்நிலையை உயர்த்திட்டீர்
இறையிடத்தே இளைப்பாறும் பேறினையும் பெற்றிட்டீர்
ஆண்டாண்டு போனாலும் உம்நினைவு மறந்திடுமோ
ஆண்டுகள் பதினைந்து கடந்தாலும் உம்நினைவுடன் வாழ்ந்திடும்....
தகவல்:
குடும்பத்தினர்