வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சிலாபம் அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேதுருப்பிள்ளை இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறப்பு: 05-03-1940, இறப்பு: 24-07-2025ஒர் ஆண்டுகள் ஆகிவிட்டதே அப்பா…
ஆனா நீங்கள் இல்லாததை மனம்
இன்னும் ஏற்கவே இல்லை…
நேரம் முன்னேறிக்கொண்டே போகிறது, ஆனால்
உங்கள் நினைவுகள் மட்டும் அங்கேயே நின்றுவிட்டது…
சில நேரங்களில் உங்களிடம் பேச வேண்டும் போல தோன்றுகிறது,
அந்த அமைதிதான் பதில் தருகிறது… நீங்கள்
சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு வார்த்தையும், இன்று
எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது…
நாங்கள் சிரிக்கும் தருணங்களிலும், ஒரு
மூலையில் உங்கள் நினைவு மறைந்து நிற்கிறது…
நீங்கள் இல்லாத இடம் வெறுமையாக இருந்தாலும்,
நீங்கள் தந்த அன்பு எப்போதும்
எங்களை சுற்றிக் கொண்டே இருக்கும்…
நினைவுகளில் நீங்கள்…
எங்கள் இதயத்தில் என்றும் நீங்கள்…
யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு சோதிமலர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறப்பு: 15-08-1946
, இறப்பு: 30-04-2020
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஆறு ஆயிற்று!
ஆனாலும் நாம் அழுகின்றோம்
அம்மா அம்மாவென்று கண்மணிகளாய்
எமை ஆளாக்கிவிட்டு காற்றோடு
போய்விட்டீர்களே அம்மா!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும்
எமை பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம்
சந்ததிக்கு ஒளி விளக்காய் ஒளி
தந்து வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!