பீட்டர் மாமா... அன்பு அக்கறை பாசம் நேசம் என அத்தனையும் எமக்கு சின்ன வயதிலிருந்து ஊட்டி நம் குடும்பத்தில் எப்பொழுதும் கலகலப்பை உருவாக்குவார் பீட்டர் மாமா..உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கூறாதவர். உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசும் சுபாவமுடையவர். உறவுகளை எப்பொழுதும் தேடி உறவாடுபவர். கோபதாபம் பாராட்டாதவர். தனது குடும்பம் என்று ஆகியபின்னரும் தனது சகோதரிகள் சகோதரர் பிள்ளைகள் என்று எப்பொழுதும் எம்மீது அக்கறைப்பட்டு கொண்டிருப்பார். பெரிய மாமாவின் மறைவுக்கு பின்னர் எங்களுக்கு இருந்த மாமா என்ற உறவு பீட்டர் மாமா மட்டும்தான். வெகுளித்தனமாக பேசுவார். ஆனால் அந்த வெகுளித்தனத்துக்குள்ளும் வெறும் அன்பு மட்டுமே இருக்கும். மாமன் சகோதரன் என்பதற்கு அப்பால் அவர் நல்ல தந்தையாகவும் நல்ல கணவராகவும் இருந்தவர். ஆண்டியும் பீட்டர் மாமாவும் ஓர் அந்நியோன்ன தம்பதிகள். பிள்ளைகள் பெரியவர்களாக ஆன பின்னரும் ஊரிலிருக்கும் மகன்மீதும் தங்களோடு இருக்கும் மகள்மீதும் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று அன்றாடம் அவர்கள் நினைப்பிலேயே இருந்தார் பீட்டர் மாமா. பீட்டர் மாமா கனடாவில் இருந்தபோதும் எங்கள் ஊர்மீதும் அவரது உறவுகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ பிரான்ஸ் லண்டன் என்று அந்த ஊர்களை நேசித்ததோடு அடிக்கடி எம்மையெல்லாம் வந்து சந்தித்து சொந்தம் பாராட்டி செல்வார். பீட்டர் மாமா.. இப்படியொரு மாமா எல்லோருக்கும் கிடைக்காதா என்று ஏங்கக்கூடிய ஒரு அற்புதமான உறவு பீட்டர் மாமா. பாழாய்ப்போன கொரோன உலகையே உலுப்பி எடுத்த பின்னரும் அதிலிருந்து ஒதுங்கிதப்பியிருந்த மாமாவை காலத்தின் கட்டாயமாக பாதித்தது என்பது விதியென நோவதா? இல்லை இதுவே இயற்கை என்று மனதை ஆற்றிக்கொள்வதா? பீட்டர் மாமா...என்றும் எங்கள் நினைவுகளை விட்டும் மனங்களை விட்டும் விலகிப்போகமாட்டார். காலமும் நேரமும் ஆன்டிக்கும் மிஷேலுக்கும் விமலுக்கும் எங்களுக்கும் ஆற்றுகையை தரும் என்ற நம்பிக்கையில் விடைகொடுக்கிறோம் பீட்டர் மாமா. போய்வாருங்கள். மருமக்கள். டேவிட் , ஜேசுதாசன், மரியதாசன், ரவி, ஜான்சன், ஜோஷான.
It was truly a pleasure working with the beautiful human being. I will deeply missed the presence.