

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பெரியநாயகி கதிரித்தம்பி அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணக்கப்பிள்ளை கதிரித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகம்மா மற்றும் சரஸ்வதி, சவுந்தரம்(ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை- உரும்பிராய் இந்துக் கல்லூரி), ஆறுமுகம்(ஓய்வுபெற்ற உதவி சாலை முகாமையாளர்- இலங்கை போக்குவரத்து சபை, கோண்டாவில்), குணபூஷணி, கதிரேசபிள்ளை(ஓய்வுபெற்ற உதவி கல்விப்பணிப்பாளர்- வேலணை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(வர்த்தகர்), சொர்ணலிங்கம்(வர்த்தகர்), மயில்வாகனம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்), நடராசா(ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர்) மற்றும் திலகவதி, வரதலட்சுமி(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் இளையதம்பி இந்து வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கருணாநிதி, கமலபூஷணி, கமலவேணி, கமலவதனி, சத்தியவாணி, லோகேஸ்வரன், கேதீஸ்வரி, ரதீஸ்வரி, ரமணி, மனோகரி, பகீரதி, மயூரதி, சுரநுதா, சோபிதா, மயூரன், நர்த்தனன், பிரணவன், யசோதரன், மீனா, அபர்ணா, சியாமா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
நித்தியா, தற்பராநந்தா, முருகதாஸ், தர்ஸனன், கீர்த்தனன், பவந்தினி, மஞ்சுளாதேவி, சதானந்தன், காலஞ்சென்ற உதயசூரியன் மற்றும் சுந்தர்ராஜ், ஏகாம்பரம், இராசநிதி, ஜெயக்குமார், லிங்கேஸ்வரன், புஸ்பாகரன், குபேரன், சிவானந்தன், செந்தில்குமரன், நந்தகுமார், சகிலா, வேணுஜா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2021 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நீர்கொழும்பு WS மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.