முதுமையென்றாலும் முழுமையாய் துயரில் துடிக்கும் உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்து சுந்தரம் ஐயா அவர்களின் உயிர் இறையடிசேர வழிபடுவோம். மோகன் அண்ணாவின் தமிழும், கலையும்,நினைவாற்றலும் இவரின் வழித்தோன்றல் திறனாகப்பார்க்கின்றேன்! அவரில்லை அவர்ஆற்றல்கள் தமிழுலகில் தொடரும் என்று நம்பிக்கை கொண்டு மனஉறுதியுடன் இருப்போம். இவரின்பேரப்பிள்ளைகளும் தமிழுடனும் கலையடனும், நகைச்சுவை நிறைந்த வர்களாக திகழ்கின்றார்கள் என்பதும் இவரை உயர்த்திப்பார்க்க வைக்கின்றது! அத்தகையவர் மறைவால் துயருறும் அனைவருக்கும் ஆறுதல் தெரிவிக்கின்றோம். சாரங்கன் ,பிரியங்கன், அபிராபி,சங்கவின்,செங்கரன், செந்தனேசு(ஸ்)வம்சி, துயன் ஆகிய பேரப்பிள்ளைகள் அன்புடன் பழகிய அப்பப்பாவை,அம்மப்பா வை இழந்து வருந்தும் வேளை,உலகஇடர்காலம் என்பதால் நேரில் சென்று கடமைகள் செய்ய முடியாத துயர் இரட்டிப்பாகின்றது என்செய் வோம். ஆண்டாண்டு தோறும் அழுதுபுரண்டாலும் மாண்டார்வருவாரோ மாநிலத்தே நமக்கும் அதுவழியே என்று நாம்போம் அளவும் நமக்கென்ன என்று இட்டு உண்டு இரும். என்ற தமிழ் வரிகளை ஆறுதலுக்காய் நினைவுபடுத்தி அவரின் உயிர் இறையடி சேரவழிபடுவோம். பயணசெலவை ஏழை மக்களிற்க்களித்து மனதில் அமைதிகாண்போம்.