பொங்கு தமிழீழ வடநாடாம் வடமராட்சி அங்கு பல்கலை கரணவாய் மண்ணதனில் பொங்கும் பொதுநல தொண்டன பேரின்பம் அன்பும் அறனும்; கொண்ட நல்லுள்ளத்தான் இல்லறம் என்னும் நல்லறம் இனிதாக தொல்லை தரும் துன்பம் துவட்டிவிடாது இல்லமது கலகலக்க ஒன்றொன்றாக சிறந்த செல்வங்கள்; பெற்ற பேரின்பம் பொங்கு தமிழ் இன்னலிடை தவித்தவேளை தங்கு மிடம்தேடி தஞ்சம் புகுந்த கனடாவில் இன்பமுடன் இனிதே வாழ்ந்து வந்த வேளை பூவுலகு நீங்கி விண்ணுலகு புகுந்தாயோ என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை உன் செயலே என்று உணரப் பெற்று பெற்றவர் கடமையென பெருமிதம் கொண்டு சான்றோர்கள் ஆக்கிய பெருமைதனைக் கொண்டாய் உடுப்பிட்டி அமெரிக்க கமிஷன் வானவில்லுக்கு கனடாவில் வருடாவிழா வந்து விட்டால் வண்ணம் தீட்ட வாழவெல்லாம் உழைத்தவனே இனி வண்ணம் தீட்ட யார் வருவாரோ பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்வில் இருந்தோம்பி இல் வாழ்க்கை சிறக்க செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருந்து அகனமர்ந்து முகனமர்ந்து ஈந்தவளே! வாழ்வுதனில் கடமைக்கு மரணம் இல்லை நீ கொண்ட வாழ்வுக்கு மரணமில்லை வாழ்ந்த வாழ்வுதனை மரணம் சொல்லும் ஜனனித்த வாழ்வுதனை மரணம் வெல்லும் முன்செய் வினையால் மூண்ட இப்பிறப்பு இவ்வூனெடுத்த பின்செய் தீவினை யாதொன்றுமில்லை அன்பும் பண்பும் நிறை பேரின்பத்தை ஆண்டவா! உன் பாதம் அணைத்திடுவாய் அணைத்துவிடு! அணைத்துவிடு! உன் பாதம் இனிமேல் பிறப்பில்லாப் பெருவாழ்வு கொடுத்துவிடு வேண்டு கின்றோம்! வேண்டு கின்றோம்! மனம் வருந்தி வேண்டு கின்றோம்!