Clicky

பிறப்பு 20 SEP 1945
இறப்பு 28 SEP 2022
அமரர் பேரம்பலம் தவராஜா
வயது 77
அமரர் பேரம்பலம் தவராஜா 1945 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S.vilva (Siva) Uk 30 SEP 2022 United Kingdom

நினைவு பகிரும் மறக்கத் தகாத நினைவுகள்...! தவராஜா அண்ணா..! 22 வருடங்களுக்கு முன்னர் நான் ஜெர்மனியில் இருந்த போது...! இலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டு ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு..! நான் முயற்சி எடுத்த போது அதற்கு பக்க பலமாக நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆற்றிய பணி என்பது இன்றும் என் நினைவில் இருக்கின்றது..! காலங்கள் மட்டும் தான் கரைந்து ஓடிப் போய் இருக்கின்றது....!நினைவுகள் என்றும் நீச்சல் அடித்த வண்ணமே....!மனதார நேசித்த மனிதர்கள் மௌனித்துக் கொண்டனர் மரணத்தால்..!என்ற செய்தி என்பது ஆறிடாத வடுக்கள் தான்...!காலம் ஒரு சக்கரம் என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்...!காலத்தின் கட்டாயம் என்னவோ அதன்படி எல்லாமே நகரும்...! ஆனாலும் உங்கள் நினைவை மீட்டு செல்ல நீங்கள் ஆற்றிய நன் தொண்டுகள் என்றும் நிலையாய் நிலைத்திருக்கும்...!அண்ணலே என் கலைத்திறன் கண்டு பூரித்தவர்களில் நீங்களும் ஒருவர்..!உங்கள் அளப்பெரிய அனுசரிப்பை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்..!காலம் உங்களை கழிக்க முடியாமல் கூட்டி சென்றிருக்கிறது..!நீங்கள் விடை புரியாத புதிர் என்பது மட்டும் உண்மை...!அழிக்கவும் அசைக்கவும் முடியாத மனித மாணிக்கமாய்...!என்றும் ஜொலித்துக் கொண்டே இருப்பீர்கள் நீங்கள் மனங்களில் என்ற வாசகத்தோடு உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றேன். நன்றியுடன் வன்னியூர் சேமமடு சிதம்பரம் சிவா லண்டனில் இருந்து 🙏

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Sep, 2022
நன்றி நவிலல் Fri, 28 Oct, 2022