யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பவதாரணி தவஈசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
You never said I`m leaving
You never said goodbye
You were gone before I knew it
And only god knew why
A million times I needed you,
A million times I cried
If love alone could have saved you,
You never would have died
In life I loved you dearly
In death I love you still ...
- Kannan
காற்றின் பெருமை
அதை சுவாசிக்கும் போதுதான்
தெரியும்...
அன்பின் அருமை
நாம் நேசித்தவர்களைவிட்டு
பிரியும் போதுதான்
புரியும்...!
விளக்கின் அடியில்
படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரிவதில்லை.
அது போல தான்
சிறிப்பின் பின்னால்
சிதறிக் கிடக்கும்
சோகம் யாருக்கும்
புரிவதில்லை...
தாய் - கருவில் சுமப்பவள்
தாரம் - கழுத்தில் சுமப்பவள்
தாய் - பெத்தெடுப்பவள்
தாரம் - தத்தெடுப்பவள்
தாய் - இதயத் துடிப்பு தந்தவள்
தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்
தாய் - அனைவருக்கும்
முதல் தொட்டில்
தாரம் - இரண்டாவது தொட்டில்
தாய் - உலகில் முதல் தெய்வம்
தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்
தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்
தாரம்
- பந்தயத்தில் பங்கு பெறுபவள்
தாய் - உயிர்
தாரம் - உடலும் உயிரும்
தாய் - நேற்று இன்று
தாரம் - இன்று நாளை
தாய் - உலகின் தோற்றம்
தாரம் - உலகின் வளர்ச்சி
தாரம் - இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை
தாய்மை - இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை
இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு
பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு
நீ தாரமும் ஆகினாய்
நீ தாயும் ஆகிவிட்டாய்
கண்ணன்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Manor Park Hall,
Malden Road
KT3 6AU
We missed you Tharani(Iron Lady)😍 Rest in peace 🙌🙌 ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி🙌🙌