Clicky

பிறப்பு 28 AUG 1961
இறப்பு 18 JUL 2021
அமரர் பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்)
வயது 59
அமரர் பற்றிக் கிறேசியன் றொபேட் 1961 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் (முகிலன்) பிரான்சு 28 JUL 2021 France

ஆழ்ந்த இரங்கல்! தோழர் பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்) - [28.08.1961 - 18.07.2021] அவர்களது திடீர் மறைவுத் தகவலறிந்து அதிர்ந்து போனோம். பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி எனச் சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் இறப்பின் துயர் மிகக் கடினமானது. அது கிளறிவிடும் நினைவலைகளும் அதனோடான அதிர்வுகளும் சுமைகளாக கனக்கும். 2020 -2021 உலகப் பொது முடக்க கொரோனா காலத்திய இறப்புகள் உற்றார் உறவுகள் நட்புகளுடன் கூடிச் சொல்லி அழும் வாய்ப்பையும் வழங்கியிராதது மனிதருக்கு கிடைத்த கொடுந்துயர். தோழனாக இலங்கையில் எம்மோடு இணைந்தவர்களில் ஒருவர் பாலன். காலவோட்டத்தில் அள்ளுண்டவர்களாகி மீளவும் புலம்பெயர்வு வாழ்வில் பிரான்சில் சந்தித்துப் பேசி உறவாடும் நண்பனாய் இருந்தவர். மாலை வேளைகளில் லாசப்பல் தமிழர் கூடுமிடங்களில் பல தடவைகள் சந்தித்துப் பேசியிருக்கிறோம். இவரது இறப்பு சற்றுமே எதிர்பாராத அதிர்வுத் தகவலாய் எமக்குக் கிடைத்திருக்கிறது. "பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை!" இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உறவினர் சுற்றத்தார் நண்பர் என அனைவருடனும் நாமும் கலந்தவர்களாய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்! எனும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளூடாக அமைதி கொள்கிறோம்! மௌன வணக்கம்! முகுந்தன் (முகிலன்) பிரான்சு