அன்பின் உருவமாய் அறிவின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் விளங்கிய பாதுஷனே தாய்க்குத் தலைமகனாய் தந்தைக்கு நற்புத்திரனாய் தம்பியர்க்கு நற்சோதரனாய் சுற்றங்கள் சூழ்ந்திருக்க..... இன்னல்கள் ஏதுமின்றி இன்பமாய் வாழ்ந்திருந்தாய் நண்பர் குழாமெலாம்-உனை நாடி இருந்தபோதும் நமனவன் உனைத்தேடி வந்ததேனோ? பாட்டுகள் பல எழுதி பாங்காய் இசையமைத்து பாடி ரசிக்கவைத்த-பாதுஷனே எம்மைப் பாதியிலே பரிதவிக்க விட்டுவிட்டு எங்கே சென்றாய்? மீளாத்துயில் கொண்டு - எமை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றாயோ? நீங்கா நினைவுகளுடன் உதிரும் கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சித்து உன் ஆத்மா சாந்தியடைய - கண்ணீர்த்துளிகளை காணிக்கையாக்குகிறோம். கனடா பெரியப்பா(வசீகரன்) பெரியம்மா(சகிலா) பிள்ளைகள்
Missing you bro, keep watching over us ❤️