Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUL 2000
இறப்பு 22 JUL 2020
அமரர் பாதுசன் சுதர்சன் (Rxnin)
பழைய மாணவன்- Wallington County Grammar School, Brighton பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவன், RXNIN- YOUTUBE, SPOTIFY பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்.
வயது 20
அமரர் பாதுசன் சுதர்சன் 2000 - 2020 Morden, United Kingdom United Kingdom
Tribute 45 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 09-08-2021

லண்டன் Morden ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாதுஷன் சுதர்ஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

விண்ணோரும் தினம்
வியந்த எம் திருமகனே
ஏனோ? நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?

தாலாட்டிய உன் தாயும் தந்தையும்
உனைத் தேடித் தவிக்கின்றோம்
எங்கு ஓடி ஒழிந்தாய் மகனே
உனது முகம் காண துடிக்கின்றோம் மகனே! 

மாண்டார் வருவாரோ
என்று மற்றவர்கள் கேட்கின்றார்
பெற்றவர்கள் நாம் படும்பாட்டை
மற்றவர்கள் யார் அறிவார்?

ஆற்றுவார் யாரும் இல்லை ஐயா
தேற்றுவார் தேற்றுகின்றார்
திரவியமே நீ இல்லாமல்
தேற முடியவில்லையே மகனே
பெற்ற வயிறு பற்றி எரியுதையா...

என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?

நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே

நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும் என்று
இறைவனை வேண்டி ஏக்கத்துடன்
எதிர்பார்த்து நிற்கின்றோம்..


என்றும் உன் நினைவில் அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

நினைவஞ்சலி Thu, 30 Jul, 2020