Clicky

அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் (பத்மா)
ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், தமிழ் சமய பற்றாளர், இளைப்பாறிய அதிபர்
இறப்பு - 15 JUL 2020
அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

IRA.SHADAGOPAN , Mainattu Eluthalar Mandram 16 JUL 2020 Sri Lanka

பத்மா சோமகாந்தன் அமரரானார் °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° பத்மா சோமகாந்தன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும் . நான் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த நாளிலிருந்தே பத்மா சோமகாந்தன் மற்றும் அவரது கணவர் என். சோமகாந்தன் அவர்களும் எனக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொழும்புக் கிளையுடனும் அதன் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களுடன் இணைந்து செயல்பட்டேன் . சிறிதுகாலம் ராஜ ஸ்ரீகாந்தனும் அதன் பின்னர் நானும் கொழும்பு கிளையின் செயலாளர்களாக செயற்பட்டோம் . அக்காலத்தில் எமது மாதாந்த கூட்டங்களில் இவர்கள் இருவருமே இணைந்து கலந்து கொள்வார்கள். அப்போதெல்லாம் இலக்கிய கலந்துரையாடல்களில் இவர்களது பங்களிப்பு மிகக் காத்திரமானதாக அமைந்திருக்கும் . அவருக்கு என் ஆத்மார்த்த அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன்....