Clicky

மரண அறிவித்தல்
அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் (பத்மா)
ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், தமிழ் சமய பற்றாளர், இளைப்பாறிய அதிபர்
இறப்பு - 15 JUL 2020
அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு  நாரகென்பிட்டி Anderson Flat ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பஞ்சநதீஸ்வரகுருக்கள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகேந்திரகுருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமகாந்தன்(ஈழத்து சோமு- மூத்த எழுத்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மகாந்தன், விஜயகாந்தன், கலாஞ்சலி, சக்திகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகரஞ்சினி, மங்களகீதா, லலித், அருணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்சனா, அஜூத், அழகன், அஜயன், லக்மித், பிரவீனா, அஷ்வினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்