அமரர் பத்மாவதி தில்லையம்பலம்
வயது 93
அமரர் பத்மாவதி தில்லையம்பலம்
1930 -
2023
குரும்பசிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சின்னமா ஒரு புன்னகை அரசி, விருந்தோம்பலில் தலைவி!!!
நான் சிறு வயதில் இருந்து கவனித்ததில் சின்னம்மா அனைவருடனும்
அன்பாகவும் அரவணைப்புடனும் தான் பழகுவா. யாராவது கஷ்டத்தில் பண உதவி
கேட்டால் இரகசியமாக அவர்களது வீட்டிலேயே கொண்டு போய் கொடுப்பா. எல்லாருடைய
கஷ்டத்தையும் மிகவும் தாழ்மையுடன் செவிமடுப்பா, தன்னாலான அறிவுரைகளையும் கூறி
ஆறுதல் கூறுவா. அவர்களது அராலி வீட்டில் அதிகமா வேலை ஆட்கள் இருப்பார்கள், எனக்கு இப்போது புரிகிறது அவர்கள் சின்னம்மாவுக்காகத் தான் சுத்தி சுத்தி நிக்கிறார்கள் என்று.
குஞ்சயப்பு மாத்தளையில் இருந்து தேயிலை சாமான்கள் கொண்டுவந்தால் அதை கஷ்டப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவா. கோபத்தில் கூற வேண்டிய வார்த்தையைக்கூட பொன் சிரிப்புடனே கூறுவதில் அவவுக்கு அவாவே நிகர்..
சின்னம்மா உங்கள் சேவைகளையும், கருணை உள்ளத்தையும் நாம் எப்போதும் நினைவு கூறுவோம்...
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்!!!
சிவ சிவ என்றிடத் தீவினை மாறும்!!!
சிவ சிவ என்றிடத் தேவனும் ஆவீர்!!!
சிவ சிவ என்றிட சிவகதி தானே !!!
உங்கள் அன்புள்ள பெறாமகன் - அப்பன்
Write Tribute