யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனி தம்பிராசா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னார் கடைசி நேரம் படுக்கையில் இருந்த வேளையில் வீட்டுக்கு வந்து அவரை பார்த்து அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்ன அத்தனை நல்ல இதயங்களுக்கும், அன்னார் மரணமுற்ற செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் வாயிலாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், 31 வரை அன்போடு உணவுகளை பரிமாறிய நண்பர்களுக்கும், உறவினருக்கும், வானொலி மூலம் அறியசெய்த வானொலிகளுக்கும், வேறு பல விதங்களிலும் சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Heartfelt thoughts go out to you and your families in this time of sorrow.