

' தெய்வம் காக்கும்' அம்மா சொல்வார் அம்மாதானந்த தெய்வம் உணர்ந்தேனின்று, அருருவம் தெய்வம் என்பாரெனக்கு, அம்மாதானந்த உருவம் நிஜமாய் நின்று. மண்ணில் பிறக்க எனக்கோர் உதரமாய், தன்னிலே சுமந்தெனைப் பெற்றாய் தாய்ப்பாலுடன் கல்வியும் தந்து, சான்றோனாய் சபைதனில் உயர்த்திய அம்மாவுக்கு நன்றி ... உலகினிலே இனி வேலை இல்லை என்பாயோ? நோயுற்ற உடல் விட்டு நீங்க நினைத்தாயோ? இறப்பதுவும் பிறப்பதுவும் இயற்கையின் நியதியாக, இன்னுமோர் முறை எனக்கம்மாவாக ... ஆயிரம் உறவுகள் அவரவர் வாழ்க்கையில், அம்மாவிற்கு அடுத்தபடிதான் எல்லாம், தனக்குள்ளே உயிர் கொடுத்து, தவமிருந்து தாயெனப் பெயரெடுத்தாய், அருகில் வர யாரோ? நாளையும் நிற்பாயென நம்பினேன் நன்றே, நினையாத நேரத்தில் நிறுத்தினாய் மூச்சை, ஏற்றுக்கொள்வதேயன்றி ஏது வழி? சென்று வா அம்மா, உனது வழி எனதாக .. பல கோடி நன்றி அம்மா, எனக்கும் அம்மாவானதற்காய் ... நன்றி வணக்கம். அமலன்.
Our heartfelt condolences to my friend Umavannan family