யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாசனி சர்வானந்தன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அமுதம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன்(பிரித்தானியா), உமாவண்ணன்(பிரித்தானியா), அரவிந்தன்(பிரித்தானியா), புஷ்பராஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, புஷ்பராணி, சத்தியபாமா, உமாகாந்தன், மாலினி மற்றும் இலட்சுமிகாந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, நிருபா, காலஞ்சென்ற மதுரா மற்றும் அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr துளசி, ஜனகன், பிரசாத், பிருந்தன், அனுஷன், ஆகிரி, சகாரன், சகானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, ராமதாஸ், கிருஷ்ணானந்தன், மற்றும் சிவராஜா, புஷ்பதேவி, தேவகி, கவீந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், பரமானந்தன், இராசானந்தன், விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அம்மாவிற்கு ....
'
தெய்வம் காக்கும்' அம்மா சொல்வார்
அம்மாதானந்த தெய்வம் உணர்ந்தேனின்று,
அருவுருவம் தெய்வம் என்பாரெனக்கு,
அம்மாதானந்த உருவம் நிஜமாய் நின்று.
மண்ணில் பிறக்க எனக்கோர் உதிரமாய்,
தன்னிலே சுமந்தெனைப் பெற்றாய் தாய்ப்பாலுடன் கல்வியும் தந்து,
சான்றோனாய் சபைதனில் உயர்த்திய அம்மாவுக்கு நன்றி ...
உலகினிலே இனி வேலை இல்லை என்பாயோ?
நோயுற்ற உடல் விட்டு நீங்க நினைத்தாயோ?
இறப்பதுவும் பிறப்பதுவும் இயற்கையின் நியதியாக,
இன்னுமோர் முறை எனக்கம்மாவாக ...
ஆயிரம் உறவுகள் அவரவர் வாழ்க்கையில்,
அம்மாவிற்கு அடுத்தபடிதான் எல்லாம்,
தனக்குள்ளே உயிர் கொடுத்து,
தவமிருந்து தாயெனப் பெயரெடுத்தாய்,
அருகில் வர யாரோ?
நாளையும் நிற்பாயென நம்பினேன் நன்றே,
நினையாத நேரத்தில் நிறுத்தினாய் மூச்சை,
ஏற்றுக்கொள்வதேயன்றி ஏது வழி?
சென்று வா அம்மா,
உனது வழி எனதாக ..
பல கோடி நன்றி அம்மா,
எனக்கும் அம்மாவானதற்காய்
நிகழ்வுகள்
- Saturday, 16 Aug 2025 4:00 PM - 7:00 PM
- Tuesday, 19 Aug 2025 10:45 AM
- Tuesday, 19 Aug 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to my friend Umavannan family